‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியால் அதில் நடித்த அனைவருக்குமே புதுப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக திரிஷா காட்டில்தான் வாய்ப்பு மழை பலமாக உள்ளது.
‘லியோ’ படத்தில் விஜய்யுடன் நடித்து முடித்துள்ள அவர், மேலும் மூன்று படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். அவற்றுள் ஒரு படத்தில் தனி நாயகியாகவும் நடிக்கிறார்.
இந்நிலையில், பிரபல நடனப் பயிற்சியாளர் பிருந்தா இயக்கும் இணையத்தொடரிலும் நடிக்க உள்ளார் திரிஷா.
‘தி ரோட்’ திரைப்படத்தில் ஒப்பனையின்றி நடித்துள்ள இவர், இந்த இணையத் தொடரிலும் ஒப்பனை இல்லாமல் திரையில் தோன்றப்போகிறார்.
காவல்துறை சம்பந்தப்பட்ட கதைக்களத்துடன் உருவாகும் இத்தொடரில் இந்திரஜித் சுகுமாறன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். முன்னணி ஓடிடி தளத்தி்ல் வெஎளியாகும் இத்தொடரில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த விவரங்களை தயாரிப்புத் தரப்பு விரைவில் அறிவிக்க உள்ளது.

