விஜய் சேதுபதிக்காக சண்டையிடுவேன்: வரிந்து கட்டும் நடிகை

விஜய் சேதுபதிக்காக சண்டையிடுவேன்: வரிந்து கட்டும் நடிகை

1 mins read
1c144acc-2825-404b-8877-6f02b0e9e4c0
ஆலியா குரேஷி. - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி குறித்து யாராவது விமர்சித்தால் அவர்களுடன் சண்டையிடுவேன் என்கிறார் இந்தி நடிகை ஆலியா குரேஷி.

விஜய் சேதுபதி மிக மென்மையான மனிதர் என்றும் அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளமான நுணுக்கங்கள் உள்ளன என்றும் ஒரு பேட்டியில் ஆலியா குறிப்பிட்டுள்ளார்.

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆலியாவும் முக்கியமான வேடத்தில் நடித்தார்.

“சேதுபதியை நான் வெகுவாக நேசிக்கிறேன். அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது.

“அவருடன் பேசும்போது ஒரு நடிகரிடமோ அல்லது மிகப்பெரிய நட்சத்திரத்திடமோ பேசுகிறோம் என்கிற உணர்வே தோன்றாது. தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, தனித்தன்மையுடன் வலம் வருகிறார்.

“அவரது நடிப்பை மட்டுமல்லாமல், அவரிடம் உள்ள நல்ல பண்புகளையும் திறமையையும் நேசிக்கிறேன்,” என்று புகழ்ந்து தள்ளுகிறார் ஆலியா குரேஷி.

குறிப்புச் சொற்கள்