தமிழ் சினிமாவில் உருவாகும் தரமான படைப்புகளில் பங்கேற்க விரும்புவதாகச் சொல்கிறார் இந்தி நடிகர் விஜய் வர்மா. இவரைத்தான் நடிகை தமன்னா காதலித்து வருகிறார்.
இந்தியில் திரைப்படங்கள், இணையத் தொடர்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய் வர்மாவை தனது அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளாராம் இயக்குநர் சுதா கொங்கரா.
சூர்யாவின் 43ஆவது படத்தை சுதா இயக்குவதும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதும் உறுதியாகி உள்ளது. மேலும், நஸ்ரியாவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்துக்கு விஜய் வர்மா ஒப்பந்தமாகி உள்ளாராம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


