முனைவர் பட்டம் பெற்ற ஆட்டோ ஓட்டுநர்

1 mins read
5186dd70-c194-4db9-aff8-45eff34841af
வைரமுத்துவுடன் லூர்துராஜ். - படம்: ஊடகம்

லூர்துராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர், திரைப்பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த இவர், ‘கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இதையறிந்த வைரமுத்து அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

லூர்துராஜ் குறித்து அறிந்து வியந்து போனதாகவும், ஆட்டோ ஓட்டுநர் வட்டத்தில் அவர் ஓர் அதிசயம் என்றும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.

தனது வீட்டுக்கு அழைத்து வைரமுத்து பாராட்டியது மறக்க இயலாத அனுபவம் என நெகிழ்கிறார் லூர்துராஜ்.

குறிப்புச் சொற்கள்