நடிகரும் இயக்குநருமான தம்பி ராமைய்யாவின் மகனான உமாபதி நடித்து வரும் படம் ‘பித்தல மாத்தி’.
மாணிக்க வித்யா இயக்க, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், ‘ஆடுகளம்’ நரேன், ‘காதல்’ சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோசஸ் இசையமைத்திருக்கிறார்.
“பித்தல மாத்தி என்பது கேடித்தனம், தகிடு தத்தம் செய்பவர்களை குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதை விவரித்துள்ளோம்.
“கதையின் நாயகன் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். தனது வாழ்க்கையில் நல்லது, கெட்டது ஆகியவற்றை தெரிந்துகொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகளைச் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறான் என்பதுதான் இப்படத்தின் கதை,” என்கிறார் இயக்குநர் மாணிக்க வித்யா.
எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் திரைகாண உள்ளது.


