அதர்வாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள் குஷி

1 mins read
cb83c939-1891-4ff1-a762-bd2c8d670b19
ஜான்வியுடன் குஷி கபூர். - படம்: ஊடகம்

காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்குப் படத்திலும் அறிமுகமாகிறார்.

ஜான்வி தமிழில் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. லவ்டுடே பட நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக அவர் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

எனினும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் இத்தகவலை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இந்நிலையில் ஜான்வியின் இளைய சகோதரி குஷி, தமிழ்ப் படத்தில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

இயக்குநர் விக்னேஷ் சிவனின் உதவியாளர் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தில்தான் குஷி நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், தமிழில் வெற்றி பெற்ற ‘லவ் டுடே’ படத்தின் இந்தி மறுபதிப்பில் குஷி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பையா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜான்வி நடிக்க இருப்பதாக வெளியான தகவலைத்தான் போனி கபூர் மறுத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்