அட்லியின் போலி வாக்குறுதி: பிரியாமணி ஆதங்கம்

அட்லியின் போலி வாக்குறுதி: பிரியாமணி ஆதங்கம்

1 mins read
5600742f-c47d-4ff4-a44a-a8ffe153bf27
பிரியாமணி. - படம்: ஊடகம்

‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் வில்லனாக நடிப்பார் என்று சொல்லி, தம்மை இயக்குநர் அட்லி ஏமாற்றம் அடையச் செய்ததாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் தாம் இணைந்து நடிக்கும் வகையில் ஒரு காட்சியை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு அட்லி சம்மதித்ததாகவும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“விஜய் நடிக்கவில்லை என்ற நிலையில், நானும் அவரும் எவ்வாறு திரையில் இணைந்து தோன்ற முடியும். ஆனால், அட்லி அப்படியொரு போலியான வாக்குறுதி அளித்தார். இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்தேன்,” என்று பிரியாமணி மேலும் தெரிவித்துள்ளார்.

அட்லி தம்மிடம் உறுதி அளித்தது உண்மைதான் என்று குறிப்பிட்டுள்ள பிரியாமணி, இதன் காரணமாக அவர் தம்மை ஏமாற்றிவிட்டதாக கூற இயலாது என்றும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ‘ஜவான்’ படத்தின் வெற்றி விழாவில் நயன்தாரா பங்கேற்காதது சர்ச்சையாகி உள்ளது. எனினும், அவ்விழா நடைபெற்ற நாளன்று நயன்தாரா தனது தாயாரின் பிறந்தநாளைக் கொண்டாடினார் என்றும் அதனால்தான் அவர் வெற்றி விழாவில் பங்கேற்கவில்லை என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை முன்கூட்டியே படக்குழுவினருக்கு நயன்தாரா தெரியப்படுத்தி விட்டாராம். அது மட்டுமல்ல, நயன்தாராவின் தாயாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பாடலும் பாடியுள்ளார் ஷாருக்கான்.

இதையடுத்து அவரது ரசிகர்களும் நயன்தாராவின் தாயாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்