மீண்டும் ‘பைக்’ பயணம் தொடங்கிய அஜித்

1 mins read
259edcd4-a679-4dbd-842a-869b5f4aaf33
அஜித். - படம்: ஊடகம்

அஜித் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் எனத் தெரியாமல் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக இயக்குநர், தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், அண்மையில் வெளியான தகவல் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார் அஜித். அவர் ஓமான் நாட்டில் ‘பைக்’ பயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து அரபு நாடுகள் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

அவரது அண்மைய பயணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அவற்றை ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வந்தாலும், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்