அடிதடிக்குத் தயாராகும் ‘ரிவால்வர் ரீட்டா’

அடிதடிக்குத் தயாராகும் ‘ரிவால்வர் ரீட்டா’

1 mins read
a0602d1e-5d06-4362-87c2-80b23358f636
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘மாமன்னன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் மதிப்பு அதிகரித்துவிட்டது. தமிழிலும் தெலுங்கிலும் அவருக்கான வாய்ப்புகள் பல தேடி வருகின்றன.

தற்போது, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘ரகுதத்தா’, ‘சைரன்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி. இவற்றுள் இரண்டு படங்கள் நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைக்களங்களுடன் உருவாகின்றன.

அதுமட்டுமல்ல, நயன்தாராவைப் போல் அடிதடி, அதிரடி கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளாராம்.

‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் சண்டைக் காட்சிகள் உள்ளன. அவற்றில் நடிக்க சிறப்புப் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

“தொடக்கத்தில் இளமையான காதல் கதாபாத்திரங்களில் நடித்தேன். அதன் பிறகு ‘மகாநதி’, ‘சாணிக்காயிதம்’ போன்ற படங்கள் எனது நடிப்புப் பசிக்குத் தீனிபோட்டன.

“இப்போது ‘ரிவால்வர் ரீட்டா’ போன்ற கதாபாத்திரங்கள் தேடி வருகின்றன. மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ள நான் என்றுமே தயங்கியதில்லை. இப்போது நடித்து வரும் படங்கள் ரசிகர்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும்,” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்