இயந்திரப் பெண்ணாக நடிக்கும் ஹன்சிகா

இயந்திரப் பெண்ணாக நடிக்கும் ஹன்சிகா

1 mins read
fe7e53ef-f019-4780-8fa9-954f75377309
‘மை3’ இணையத்தொடரில் சாந்தனு, ஹன்சிகா, முகேன். - படம்: ஊடகம்

‘மை3’ என்ற பெயரில் உருவாகும் இணையத்தொடரில் நடித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.

இதில் மலேசிய நடிகர் முகேன் ராவ் நாயகனாகவும், சாந்தனு, ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

காதல், நகைச்சுவை படங்களை இயக்கி இளையர்களைக் கவர்ந்த ராஜேஷ்.எம் இயக்கி உள்ள தொடர் இது. எனவே காதலும் நகைச்சுவையும் தூக்கலாக இருக்குமாம்.

அது மட்டுமல்ல, ஹன்சிகா இயந்திரப் பெண்ணாகவும் (ரோபோ) பல காட்சிகளில் நடித்துள்ளார்.

“கதைப்படி நாயகன் முகேன், ஒரு பணக்காரத் தொழிலதிபர். இளம் ரோபாட்டிக் விஞ்ஞானியாக இருக்கும் சாந்தனு, தனது காதலியான ஹன்சிகாவின் தோற்றத்தில் ‘மை3’ என்கிற செயற்கை நுண்ணறிவு ரோபோவை உருவாக்குகிறார். அதை வாங்குவதற்கு சாந்தனுவுடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறார் முகேன்.

“அவரிடம் இந்தியப் பெண்ணை ஒப்படைக்கும் முன்பு திடீரென தொழில்நுட்பச் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் ‘மை3’ தாறுமாறாக நடந்து கொள்ளும். இதனால் சாந்தனு குழம்பிப் போகிறார். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்தான் கதை,” என்று இயக்குநர் ராஜேஷ் தரப்பு கூறுகிறது.

தற்காலிக ஏற்பாடாக, தனது காதலி ஹன்சிகாதான் இயந்திரப் பெண் என்று சொல்லி முகேனை நம்ப வைப்பாராம் சாந்தனு. முகேனுடன் செல்லும் ஹன்சிகாவுக்குப் பல்வேறு சிக்கல்களும் சங்கடங்களும் ஏற்படுகின்றன.

அப்போது நடக்கும் அமளிகளை திரையில் காண விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என இயக்குநர் தரப்பில் இப்போதே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தற்போது தமிழில் இரண்டு புதுப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் ஹன்சிகா.

குறிப்புச் சொற்கள்