இந்தியில் சல்மானுக்கு ஜோடியாகும் திரிஷா

1 mins read
957436d1-f259-4555-a9d0-381d02177f75
திரிஷா. - படம்: ஊடகம்

நயன்தாரா இந்தியில் உச்சத்தில் உள்ள நடிகர் ஷாருக்கானுடன் நடித்துவிட்ட நிலையில், திரிஷாவுக்கும் இந்திப் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

நடிகர் சல்மான் கானை வைத்து இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இந்திப் படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளார்.

‘ஜவான்’ திரைப்படம் ரூ.700 கோடி வசூல் கண்டுள்ள நிலையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கதாநாயகியை ஒப்பந்தம் செய்யுமாறு சல்மான் கூறிவிட்டாராம்.

இதையடுத்து, திரிஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கெனவே, விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ‘சர்வம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் திரிஷா.

தற்போது ‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், தனி நாயகியாகவும் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியில் நடிப்பதன் மூலம் மீண்டும் இவரது சந்தை மதிப்பு அதிகரிக்கும் என்றாலும் தமிழ் படங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்க விரும்புகிறாராம்.

குறிப்புச் சொற்கள்