சூர்யா நடிக்கும் ‘கர்ணா’

1 mins read
0f3df99f-dfdb-4b21-b33a-6932a1b11c64
சூர்யா, இயக்குநர் ராகேஷ். - படம்: ஊடகம்

சூர்யா இந்தியில் நடிக்கும் படத்துக்கு கர்ணா என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகும் எனத் தெரியவந்துள்ளது.

தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் ராகேஷ் ஓம் பிரகாஷ் என்பவர் இயக்கும் ‘கர்ணா’ என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சூர்யா. மகாபாரதத்தை கதைக்களமாகக் கொண்டு இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகிறது.

கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படைப்பு என்பதால் ‘கர்ணா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு தொடங்க உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்