நல்ல கதையும் கதைக்களமும் அமைந்தால் அறிமுக இயக்குநர்களின் படங்களில் தயக்கமின்றி நடிக்கத் தயார் என்கிறார் நித்யா மேனன்.
அந்த வகையில், அறிமுக இயக்குநர் கோமடேஷ் உபாத்தியே இயக்கி உள்ள ‘குமாரி ஸ்ரீமதி’ என்ற தெலுங்கு படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்படும் இந்தப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. தமிழ், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் வெளியிட உள்ளனர்.
“இந்தப் படத்தில் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பெண்ணாக நடித்துள்ளேன். ‘குமாரி ஸ்ரீமதி’ படத்தின் சுவரொட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழில் தனுஷ் இயக்கி, நடிக்க இருக்கும் புதிய படத்தில் நித்யாமேனன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.