இசையமைப்பாளர் அனிருத்தை காதலிப்பதாக வெளிவந்த தகவலை மறுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இதுபோன்ற வதந்திகளை மறுத்து தமக்கு அலுத்துப் போய்விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்புதான் கேரள அரசியல் தலைவர் ஒருவரின் மகனை கீர்த்தி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் கூறப்பட்டது. அதை அவர் மறுத்தார்.
இந்நிலையில், அனிருத்தும் இவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து இருவரும் தீவிரமாகக் காதலிப்பதாக ஒரு தகவல் ஊடகங்கள் மூலம் பரவி வருகிறது.
இதையடுத்து, தனது திருமணம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது என மீண்டும் கீர்த்தி கூறியுள்ளார்.
“அனிருத் எனக்கு நல்ல நண்பர். எனக்கு திருமணம் நடக்கும். அது எப்போது நடக்கும் என்பது முறைப்படி அறிவிக்கப்படும்,” என்பதுதான் கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள அண்மைய விளக்கம்.