தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நயன்தாரா, யோகி பாபு நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’

1 mins read
af391848-e041-46c7-b46a-d0648b294638
நயன்தாரா. - படம்: ஊடகம்

‘கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் யோகி பாபுவும் மீண்டும் ஒரு படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

அறிமுக இயக்குநர் விக்கி என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

‘மண்ணாங்கட்டி’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சான் ரோல்டன் இசையமைக்கிறார்.

தமிழில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘இறைவன்’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. தற்போது ‘டெஸ்ட்’ உள்ளிட்ட மூன்று படங்களில் அவர் நடித்து வருவதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்