‘மார்கழி திங்கள்’ பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

‘மார்கழி திங்கள்’ பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

1 mins read
2701729d-c3e9-42f9-bb48-d89c0bad034f
‘மார்கழி திங்கள்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கியுள்ள ‘மார்கழி திங்கள்’ படம் அக்டோபர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை தயாரித்திருப்பதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன். பாரதிராஜாவும் மகன் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் இசை, முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதே வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக இயக்குநர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குநரின் மகன் என்றாலும், மனோஜுக்கு நடிகராக எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. 18 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகே ஒரு படத்தை தம்மால் இயக்க முடிந்ததாக அவர் அண்மையில் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்