நல்ல படைப்பாக உருவாகும்: ரஜினி நம்பிக்கை

நல்ல படைப்பாக உருவாகும்: ரஜினி நம்பிக்கை

1 mins read
2dfbccdb-1cc5-4249-828b-c4c9b0f29c33
ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ். - படம்: ஊடகம்

தமது நடிப்பில் உருவாகும் 171வது படம் நன்றாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம், புதுப் படத்துக்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘சற்று தாமதமாகும்’ என்று பதிலளித்தார்.

படம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, “சற்று பொறுத்திருக்கத்தான் வேண்டும். படம் நிச்சயமாக நல்ல படைப்பாக இருக்கும்,” என்றார் ரஜினி.

இதற்கிடையே, தன்னுடைய ரசிகராக உள்ள லோகேஷ் கனகராஜ், தனது நண்பரான ரஜினிக்கு படம் இயக்குவது என்பது தமக்குப் பெருமை சேர்க்கும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

“எனக்கும் ரஜினிக்கும் இடையேயான நட்பு, இதற்கு முந்தைய தலைமுறையிடம் காணப்படாத ஒன்று என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். ரஜினி படத்தை லோகேஷ் இயக்குகிறாரே என்று கேள்வி கேட்கிறார்கள்.

“அப்படி கேட்பவர்களுக்கு அவ்வளவுதான் தெளிவு,” என்று துபாயில் நடைபெற்ற திரைப்பட விருது நிகழ்ச்சியில் பேசும்போது கமல் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்