பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா உயிரை மாய்த்துக் கொண்டது திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாக அவர் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. பின்னர் குடும்பத்தார் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, மீரா உயிரற்ற நிலையில் காணப்பட்டார்.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மீரா, கடந்த ஓராண்டாக மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்ததாகவும் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனிக்கு இன்னொரு மகளும் உள்ளார். இவரது சிறு வயதிலேயே தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தற்போது மகளும் அத்தகைய முடிவெடுத்தது அவரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.