விஜய் - ஷாருக்கான் - அட்லி இணையும் படம்

விஜய் - ஷாருக்கான் - அட்லி இணையும் படம்

2 mins read
5e475e5e-9a02-4d7b-b642-d3bf49a45c8e
இயக்குநர் அட்லி பிறந்தநாள் விழாவில் விஜய், ஷாருக் கான். - படம்: ஊடகம்

ஷாருக்கானுடன் சேர்ந்து நடிக்கும் வகையில் ஒரு புதிய கதையை எழுதுமாறு விஜய், ஷாருக்கான் இருவரும் சொன்னதாக அட்லீ தெரிவித்துள்ளார்.

அண்மைய பேட்டி ஒன்றில் அட்லி கூறுகையில், “என்னுடைய பிறந்தநாள் விழாவில் ஷாருக்கான் - விஜய் இருவரும் குழந்தைகளைப்போல பேசிக்கொண்டனர். இருவரும் என்னிடம் தங்களுக்காக ஒரு கதையை எழுதுமாறு கூறினர்.

“என்னுடைய பிறந்தநாள் என்பதால் சும்மா ஒரு பேச்சுக்கு சொல்கின்றனர் என்று நினைத்தேன்.

“ஆனால் மறுநாளும் விஜய் எனக்கு மெசேஜ் செய்து, ‘நீ அந்தக் கதையை எழுதினால் நிச்சயமாக நான் அதில் நடிக்கிறேன்’ என்று கூறினார்.

“எனதருகில் இருந்த ஷாருக்கானும் அதை உறுதி செய்தார். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் அவ்வப்போது அந்த கதை குறித்து என்னிடம் கேட்டு வருகின்றனர்.

“நிச்சயமாக ஒருநாள் அந்தக் கதையை எழுதி அவர்கள் இருவரையும் அதில் நடிக்க வைப்பேன்,” என்று அட்லி கூறினார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்திலேயே நடிகர் விஜய் கௌரவ வேடத்தில் வருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசிவரை விஜய் அந்தப் படத்தில் ஒரு காட்சியில்கூட வரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

இப்படம் உலகம் முழுவதும் 12 நாள்களில் ரூ.883.68 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வார இறுதியில் இப்படம் ரூ.1,000 கோடி வசூலைத் தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லியின் அறிவிப்பால் விஜய் ரசிகர்களும் ஷாருக்கான் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

அந்தப் படம் விரைவில் உருவாக அவர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்