‘லவ் டுடே’ நாயகன் படத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

1 mins read
e5762069-4e5f-43d3-a2b9-b498cd802723
பிரதீப் ரங்கநாதனை இயக்கும் விக்னேஷ் சிவன். - படம்: ஊடகம்

நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனுக்கு பேரீச்சம்பழங்களை (டேட்ஸ்) கொடுக்கிறார் பிரதீப். இதன்மூலம் அவர் படத்துக்கு ‘டேட்ஸ்’ கொடுத்துள்ளதை மறைமுகமாக விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். சரியான நேரத்தில் தன்னை பிரதீப் காப்பாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‘தேங்க் யூ ஃபார் தி டேட்ஸ்’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் நயன்தாரா கௌரவ வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்