‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலாநிதி மாறன் கொடுத்த காரில் தான் இங்கு வந்தேன். பணக்காரனாகிவிட்டேன் என்ற உணர்வு இப்போதுதான் எனக்கு வந்தது.
“உண்மையாகவே அந்த காரில் உட்கார்ந்து வரும்போது அப்படி இருந்தது. ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் அதில் வேலை பார்த்தவர்களுக்கு ஒரு தயாரிப்பாளர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கலாநிதிமாறன் முன்னுதாரணமாக இருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
“ஜெயிலர் படம் பார்த்த பிறகு பேசிக்கொண்டிருந்தோம்.
“வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் ரீ-ரெக்கார்டிங் முன்பு படம் சுமாருக்கும் மேலாக (above average) இருந்தது.
“அனிருத் அந்தப் படத்தை தூக்கி நிறுத்திவிட்டார். எப்படியாவது எனக்கு ஹிட் கொடுக்கவேண்டும், நெல்சனுக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டார் அனிருத்.
“கல்யாணப் பெண் அலங்காரத்துக்கு முன் எப்படியிருக்கும். அப்படியிருந்த ‘ஜெயிலர்’ படத்தை அலங்காரத்துக்கு பின் மணப்பெண் எப்படியிருக்குமோ அப்படி மாற்றிக்காட்டினார்,” என்று ரஜினி பேசினார்.
இது தற்போது இணையத்தில் சூடாகப் பரவி வருகிறது.
‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி விழா கொண்டாடும் நேரத்தில் ரஜினி இவ்வாறு பேசியது இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு கடும் வேதனையை ஏற்படுத்தும் என்றும் ரஜினி ஒரு தலைபட்சமாகப் பேசுவதாகவும் இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.