இந்தியில் நாயகியாக உயர்ந்த நித்யா மேனன்

இந்தியில் நாயகியாக உயர்ந்த நித்யா மேனன்

1 mins read
1713d506-9261-44ac-a2bf-9d07250860f8
நித்யா மேனன். - படம்: ஊடக்

நயன்தாராவைத் தொடந்து நடிகை நித்யா மேனனும் இந்தித் திரையுலகில் அறிமுகமாகிறார்.

விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் ‘மர்டர் மிஸ்டரி’ படத்தில் இவரை நாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.

இதில் விவேக் ஓபராய், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆசிஷ் வித்யார்த்திக்கு மூத்த விசாரணை அதிகாரி வேடமாம். தற்போது ஸ்காட்லாந்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஏற்கெனவே அக்‌ஷய்குமார் நடித்த ‘மிஷன் மங்கள்’ என்ற இந்திப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன். இப்போது நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நாயகியாக நடிப்பது உற்சாகம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்