சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை நினைத்தால் வேதனையாக உள்ளது என்று நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், திரையுலகில் முன்பு விட்ட இடத்தை மீண்டும் பிடித்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
“நான் இயக்கிய ‘அன்பே ஆருயிரே’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டேன். இன்றும் இதை நினைக்கும் போதெல்லாம் வேதனையாக இருக்கிறது.
“அதன் பின்னர் ‘இறைவி’ படத்திலிருந்து மீண்டும் என் வாழ்க்கை தொடங்கியது என்பேன். அதன் பலனாக ‘மார்க் ஆண்டனி’ படத்தின் மூலம் விட்ட இடத்தைப் பிடித்துவிட்டேன்,” என்று எஸ்.ஜே.சூர்யா மேலும் தெரிவித்தார்.
‘மார்க் ஆண்டனி’ படத்தில் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் இவர் நடித்துள்ளார். திரை விமர்சகர்கள் படத்தின் வெற்றிக்கு எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு முக்கியக் காரணம் என பாராட்டி உள்ளனர்.

