‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். மேலும், ‘அட்டகத்தி’ தினேஷும் முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, இதில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், இரண்டாம் பாகத்தில் சில முன்னணி கலைஞர்களும் இணைந்துள்ளனர். அந்த வகையில் தனது இயக்கத்தில் உருவான ‘அசுரன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்த மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளார் வெற்றிமாறன்.
இதிலும் கனமான, மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம் மஞ்சு வாரியர். அதேபோல், தினேஷும் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருவருமே விஜய் சேதுபதியுடன் தொடர்புடைய ‘பிளாஷ்பேக்’ பகுதியில் நடித்து வருகின்றனர்.