லண்டனுக்குப் பறந்த பிரியங்கா

லண்டனுக்குப் பறந்த பிரியங்கா

1 mins read
558f60dc-4d2d-4f49-87f0-bc392370cd8a
நெல்சன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோருடன் பிரியங்கா மோகன். - படம்: ஊடகம்

ஜெயிலர்’ பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு சென்றுள்ளார். அவருடன் நடிகை பிரியங்கா மோகன், நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

நெல்சன் இயக்கிய ‘டாக்டர்’ படம் வெளியானதும், இதே கூட்டணி துபாய்க்கு சுற்றுலா சென்று வந்தது.

தற்போது தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா. இந்நிலையில், நெல்சனின் அடுத்த படத்திலும் இவர்தான் நாயகி என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதேசமயம், நெல்சன் நட்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்றும் தனது வெற்றியை நண்பர்களுடன் கொண்டாடவே இந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் அவரது தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்