தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் இணையும் கார்த்தி, பா.ரஞ்சித்

1 mins read
8db03083-9642-4c6e-bb50-fd1a39c3b364
கார்த்தி. - படம்: ஊடகம்

இயக்குநர் பா. ரஞ்சித்தும் நடிகர் கார்த்தியும் மீண்டும் இணைய உள்ளனர்.

இதற்கு முன்பு இருவரும் மெட்ராஸ் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

வடசென்னை மக்களின் வாழ்க்கை, காதல், அரசியலை மையப்படுத்தி உருவான இப்படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

கார்த்தியின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்த இப்படம் விமர்சன, வசூல் ரீதியில் சாதித்தது.

இந்நிலையில், இருவரும் மீண்டும் இணையும் படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இம்முறையும் மாறுபட்ட கதைக் களத்துடன் தயாராகி உள்ளாராம் ரஞ்சித். மேலும், கார்த்தியும் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்