ஹாலிவுட்டில் வாய்ப்புகள்; பூரிப்பில் அட்லீ

ஹாலிவுட்டில் வாய்ப்புகள்; பூரிப்பில் அட்லீ

1 mins read
62a56eb9-66d9-4a0d-920e-513568272a95
ஷாருக்கானுடன் அட்லீ. - படம்: ஊடகம்

‘ஜவான்’ படத்தின் வசூல் வெற்றியால் அதன் இயக்குநர் அட்லீயின் சந்தை மதிப்பு கிடுகிடுவென வளர்ந்துவிட்டது.

தற்போது ஹாலிவுட் படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் தேடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வௌியான ‘ஜவான்’ படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளது. இதில் நயன்தாரா நாயகியாகவும் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாகவும் காட்சிகள் அனைத்தும் சுவாரசியமாகவும் இருந்ததுதான் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

இந்நிலையில், ஹாலிவுட்டில் இருந்து பல்வேறு அழைப்புகள் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் அட்லீ.

தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு விஜய், ஷாருக்கான் உள்ளிட்டோரே முக்கியமான காரணம் என்றும் அடுத்த படத்தை இயக்குவதற்கு இப்போது அவசரப்படவில்லை என்றும் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்