சிரஞ்சீவிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்

சிரஞ்சீவிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்

1 mins read
b0af0713-0440-4830-b897-68612ce3880a
ஐஸ்வர்யா ராய். - படம்: ஊடகம்

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 157ஆவது படத்தில் அவரது ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்பட மூன்று நாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர்.

அனுஷ்கா, இந்தி நடிகை மிருணாள் தாகூர் ஆகியோரே மற்ற இரு நாயகிகள் ஆவர்.

மல்லிடி வசிஷ்டா என்பவர் இயக்கும் இந்தப் படத்துக்கான தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் அறிவியல், கற்பனை சார்ந்த காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்றும் மூன்று நாயகிகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் முதலில் தயங்கினாராம். எனினும், அவர் எவ்வளவு ஊதியம் கேட்பார் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த படத் தயாரிப்புத் தரப்பு, இருமடங்கு தருவதாகக் கூறியதும் ஐஸ்வர்யா தயக்கத்தை உதறிவிட்டு கால்ஷீட் ஒதுக்கியதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்