மும்பையில் ஆட்டோ பயணம்; கீர்த்தி உற்சாகம்

மும்பையில் ஆட்டோ பயணம்; கீர்த்தி உற்சாகம்

1 mins read
fdd186b7-8c27-478a-8223-094f6c2eb566
ஆட்டோவில் கீர்த்தி சுரேஷ், வருண். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தமிழில் வெற்றிபெற்ற ‘தெறி’ படத்தின் இந்தி மறுபதிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

மும்பையில் நடைபெறும் படப்பிடிப்புக்காக அங்கு முகாமிட்டுள்ள அவர், அண்மையில் படத்தின் நாயகன் வருண் தவானுடன் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இருவரும் ஆட்டோவில் செல்வதைக் கண்டு ரசிகர்கள் வியப்படைந்தனர். பின்னர் இருவரையும் நோக்கி கைகளை அசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

“பரபரப்பான மும்பை நகரில் ஆட்டோவில் செல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது. இதை வருண் தவானிடம் கூறியதும், உடனடியாக ஆட்டோ ஒன்றை வரவழைத்தார். என்னுடைய ஆசையை நிறைவேற்றிய அவருக்கு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி.

ஆட்டோ பயணத்தின்போது எடுக்கப்பட்ட படங்களையும் காணொளியையும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்