ஐம்பதாவது படம்: நன்றி தெரிவித்த அஞ்சலி

ஐம்பதாவது படம்: நன்றி தெரிவித்த அஞ்சலி

1 mins read
bbc3e5af-44d3-4292-bff4-1588f912b19e
அஞ்சலி. - படம்: ஊடகம்

திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது ஐம்பதாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை அஞ்சலி.

தெலுங்கில் உருவாகும் ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ என்ற படம்தான் அஞ்சலி நடிக்கும் ஐம்பதாவது படமாக அமைந்துள்ளது.

“எனது ஐம்பதாவது படத்துக்கான படப்பிடிப்பில் காலெடுத்து வைக்கும் இன்றைய நாளில் இது ஓர் அபாரமான பயணத்தின் தொடக்கம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

“கடந்த 16 ஆண்டுகளாக எனது உயர்வு தாழ்வுகளில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி. இன்னும் சவாலான எல்லைகளைத் தொட இது என்னை உத்வேகப்படுத்தும்,” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் அஞ்சலி.

தற்போது தமிழில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ள இவர், தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

2006ஆம் ஆண்டில் ‘போட்டோ’ என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார் அஞ்சலி. அதன் பின்னர் 2007ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘கற்றது தமிழ்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்