கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து போரடித்துவிட்டதாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அடுத்து முன்னணி நாயகர்களுடன் இணைந்து வணிக அம்சங்கள் நிறைந்த படங்களில் நடிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் ஜிவி பிரகாஷுடன் ‘டியர்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஐஸ்வர்யா கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. தெலுங்கில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறாராம்.
இந்நிலையில், வணிகப் படங்களில் நடிப்பதற்குத் தயார் என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கும் வகையில் ஓரளவு கவர்ச்சியாகக் காட்சியளிக்கும் தனது புதிய புகைப்பபடங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

