கிரிக்கெட் வீரரைக் காதலிக்கும் நாயகி

1 mins read
19456bd4-caa8-4297-a8a5-c9ae9b038d31
பூஜா ஹெக்டே. - படம்: ஊடகம்

நடிகைகளுக்குத் திருமணம் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவராவிட்டால்தான் ஆச்சரியம். நடிகைகள் திரிஷா, சாய்பல்லவியை தொடர்ந்து தற்போது நடிகை பூஜா ஹெக்டேவுக்குத் திருமணம் என்ற தகவலும் பரவி வருகிறது.

தங்களுக்குத் திருமணம் என்று வெளியான செய்தியை திரிஷாவும் சாய் பல்லவியும் மறுத்திருந்தனர். இந்நிலையில், பூஜா ஹெக்டே, மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த இளம் கிரிக்கெட் வீரருக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர். அவரை முதன்முதலில் சந்தித்தபோதே பூஜா மனதில் காதல் மலர்ந்துவிட்டதாகவும் அந்த வீரரும் பூஜாவை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இந்தக் காதல் செய்தியை பூஜா உறுதி செய்யவில்லை. சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வீரரும் மறுக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்