முதன்முறையாக மகன்கள் முகத்தைக் காட்டிய நட்சத்திரத் தம்பதி

1 mins read
850d09ef-cd12-4b77-8ceb-61bdadf11ec3
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியரின் குழந்தைகள். - படம்: ஊடகம்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகளின் குழந்தைகள்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகளின் குழந்தைகள். - படம்: ஊடகம்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகளின் குழந்தைகள்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகளின் குழந்தைகள். - படம்: ஊடகம்

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது இரட்டைக் குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்தின் ஒரு வயது பிறந்தநாளை கோலாலம்பூரில் உள்ள இரட்டைக் கோபுரத்தில் கொண்டாடி உள்ளனர்.

இந்தப் புகைப்படங்களை நயன்தாரா தம்பதியர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு உயிர் ருத்ரோநீல் - உலக் தெய்வக் எனப் பெயரிட்டனர்.

இந்நிலையில், இப்போது இரட்டைக் குழந்தைகளின் பிறந்தநாளையொட்டி முகம் தெரியும்படியான புகைப்படங்களைப் பகிர்ந்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகை காஜல் அகர்வால், நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் இரு குழந்தைகளும் மிக அழகாக இருப்பதாகக் கூறி வாழ்த்துகள் பகிர்ந்துள்ளனர்.

“என் முகம் கொண்ட உயிர், என் குணம் கொண்ட உலக்... அப்பாவும் அம்மாவும் வாழ்வில் வேறு எதையும்விட உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறோம்,” என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்