விஷாலின் திருமணத்துக்கு தடைக்கல்லாக நிற்கும் முன்னாள் காதலி

விஷாலின் திருமணத்துக்கு தடைக்கல்லாக நிற்கும் முன்னாள் காதலி

படம்: ஊடகம்

28 Sep 2023 - 6:07 pm

1 mins read

45 வயதைக் கடந்த நிலையிலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார் விஷால். காதல், நிச்சயதார்த்தம் என இல்லற வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்கும் யோகம் மட்டும் இன்னும் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டே உள்ளது.

இதற்குப் பின்னால் அவருடைய முன்னாள் காதலிதான் உள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது விஷாலும் வரலட்சுமியும் காதலித்து பின்னர் பிரிந்து போனது அனைவருக்கும் தெரியும். அதன்பிறகுதான் விஷால் ஆந்திர தொழிலதிபர் மகளை நிச்சயதார்த்தம் செய்தார்.

ஆனால் அது கை கூடாத நிலையில், நடிகை லட்சுமி மேனனுடன் விஷாலுக்குத் திருமணம் என்ற செய்தி பரவியது. உடனே பதறிப்போன விஷால், இதில் உண்மை இல்லை. அவர் எனது சிறந்த தோழி மட்டும் தான். என்னுடைய கல்யாணம் உங்களுக்கு தெரியாமல் நடக்காது என விளக்கம் அளித்தார்.

ஆனால் உண்மையில் வரலட்சுமிதான் லட்சுமி மேனனை தொலைபேசியில் அழைத்து, விஷால் நல்லவர் கிடையாது, அவரை நம்பாதீர்கள் என்று கூறி பிரித்துவிட்டாராம். அதனால் தான் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவருடைய திருமணம் நின்று போயுள்ளது. ஆனால் அப்போது ஸ்ரீரெட்டி விவகாரம்தான் காரணமாகச் சொல்லப்பட்டது.

தற்போது இத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையில், வரலட்சுமி தான் விஷால் திருமணத்திற்கு தடைக்கல்லாக இருந்தார் என்ற செய்தி பூதாகரமாக வெடித்துள்ளது. விஷால் நம்பவைத்து தன்னை ஏமாற்றிய கடுப்பில்தான் வரலட்சுமி இப்படி எல்லாம் செய்வதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீயாகப் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்