தமன்னா: தமிழ் படங்கள் குறித்து கவலைப்படவில்லை

1 mins read
ff6543d4-b920-4d43-a567-274da0d610d8
தமன்னா. - படம்: ஊடகம்

தென்னிந்தியப் படங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் வணிக அம்சங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்கிறார் நடிகை தமன்னா.

மேலும், சில படங்களில் தமக்கான கதாபாத்திரத்தை கதையோடு பொருத்திக்கொள்ள முடியாமல்கூட இருந்தது என்றும் ஒரு பேட்டியில் இவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக ‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் தமிழ்ப் படங்களில் நடிக்க தாம் ஆர்வம் காட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

“என்னிடம் கதை சொல்ல வந்த இயக்குநர்களிடம் இதுகுறித்து எடுத்துச் சொல்லியும்கூட எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் ஒரு கட்டத்தில் கதை கேட்பதைக்கூட நிறுத்திக் கொண்டேன்.

“கதையை நம்பாமல், கதாநாயகனை மட்டுமே முன்னிலைப்படுத்தும் அத்தகைய கதைகளில் நடிக்காதது குறித்து நான் கவலைப்படவில்லை,” என்று தமன்னா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்