வில்லனாக நடிக்க பிரபுதேவாவுக்கு ரூ.10 கோடி சம்பளம்

வில்லனாக நடிக்க பிரபுதேவாவுக்கு ரூ.10 கோடி சம்பளம்

1 mins read
83435b0f-3e25-42ec-b729-07bfa23fa060
பிரபுதேவா. - படம்: ஊடகம்

இந்திப் படத்தில் வில்லனாக நடிக்க பிரபுதேவா பத்து கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘தசாவதாரம்’ தமிழ் படத்திற்கு இசை அமைத்த பிரபல இந்தி நடிகர் ஹிமேஷ் ரேஷ்மையா பின்னர் ‘தி எக்ஸ்போஸ்’ என்ற இந்திப் படத்தை இயக்கி நடித்திருந்தார்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதில்தான் பிரபுதேவாவுக்கு வில்லன் கதாபாத்திரம் அமைந்துள்ளது.

‘படாஸ் ரவிகுமார்’ என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகிறது. இதற்கு முன்பு ‘பஹீரா’ தமிழ் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பிரபுதேவா.

பிரபுதேவாவுக்கு இந்தியிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சில இந்திப் படங்களையும் அவர் இயக்கி உள்ளார்.

எனவே, அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்