நடனப் பயிற்சியாளர் சாண்டி, விஜய்யின் ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இ்துகுறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் தாம் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சாண்டி.
மேலும், தமது சமூக ஊடகப்பதிவில், ‘லோகேஷின் மாயாஜாலத்துக்கு அமைதியாக காத்திருங்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘லியோ’ படத்தில் நான்கைந்து வில்லன்களில் ஒருவராக சாண்டியும் மிரட்டி இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில், ஒரு நடிகராக அவர் வெற்றி பெற திரையுலகத்தினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.