இந்தியில் சல்மான் கானுடன் இணைகிறார், ஹாலிவுட்டில் ஒப்பந்தமாகி உள்ளார் என சமந்தா குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகின்றன.
இந்நிலையில் இன்ஸ்டகிராமில் சமந்தாவை முப்பது மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இத்தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் தங்களைப் பின்தொடர்வதை திரையுலகத்தினர் பெருமையாகக் கருதுகின்றனர்.
அந்த வகையில் நயன்தாராவை இன்ஸ்டகிராமில் வெறும் ஆறு மில்லியன் பேர் மட்டுமே பின்தொடர்கிறார்கள். கீர்த்தி சுரேஷை 16 மில்லியன் பேரும் ஷ்ருதி ஹாசனை 24 மில்லயன் பேரும் பின்தொடர்வது தெரிந்த சங்கதிதான்.
திரிஷாவை 6.2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வரும் நிலையில், இந்தப் பட்டியலில் சமந்தா 30 மில்லியன் ரசிகர்களுடன் முன்னணியில் உள்ளார்.
மிக கவர்ச்சிகரமான புகைப் படம் ஒன்றைப் பதிவிட்டு, இத்தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள சமந்தா, மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஓரிரு மாதங்கள் அவர் வெளிநாடுகளில் ஓய்வெடுப்பார் என்றும் அதன் பிறகு சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்தி இணையத் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க இருப்பதாகத் தகவல்.
அவர் தமிழில் முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
எனினும் சமந்தா தரப்பு அவரை மையப்படுத்தி வெளிவரும் தகவல்கள் எதையும் இதுவரை உறுதி செய்யவில்லை.

