பெண்களை ஆண்களுக்கான காட்சிப் பொருளாகப் பார்க்கக் கூடாது என்கிறார் நடிகை ரித்திகா சிங்.
பெண்கள், சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்படும்போது தனது ரத்தம் கொதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் 12 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தம்மை மனதளவில் பெரிதும் பாதித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆண் களுக்கு சமமாக பெண்களும் மதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இதுகுறித்து ஆண் பிள்ளைகளுக்கு சிறு வயது முதல் பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்கவேண்டும். பெண்களும் குழந்தைகளும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் படுகிறார்கள், கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்படும்போது வேதனையை மீறி என் ரத்தம் கோபத்தால் கொதிக்கிறது,” என்று ரித்திகா சிங் மேலும் தெரிவித்துள்ளார்.

