விஜய் ஆண்டனி நடித்து வரும் புதுப்படத்துக்கு ‘ரத்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘படைவீரன்’ பட இயக்குநர் தனா இயக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியும் வெளியாகி உள்ளது.
ரியா சுமன், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங் களில் நடிக்கின்றனர். விவேக் சிவா, மெர்வின் சாலமன் இசையமைக்கின்றனர்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி களில் இப்படம் வெளியாகிறது.
இதற்கிடையே, மூத்த மகளை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ள விஜய் ஆண்டனி, ‘ரத்தம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கு தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார்.
எதிர்வரும் அக்டோபர் 6ஆம் தேதியன்று வெளியீடு காண்கிறது ‘ரத்தம்’ படம். இதை யடுத்து இப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய படத் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, “இப்படத்தை நான் முன்பே பார்த்துவிட்டேன் என்பதால் நம்பிக்கையாகப் பேசுகிறேன். இயக்குநர் அமுதன் நல்லதொரு படைப்பை உருவாக்கி உள்ளார்,” என்று பாராட்டு தெரிவித்தார்.
மேலும் பட நாயகிகள் நந்திதா, மஹிமா, நிழல்கள் ரவி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விஜயகாந்துக்கு அடுத்தபடியாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வரக்கூடாது என்ற அக்கறையில் 24 மணிநேரமும் கால்ஷீட் கொடுத்த ஒரே நடிகர் விஜய் ஆண்டனிதான் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“அவரது குடும்பத்துக்கு இது கடினமான நேரம். எனினும் அதையும் கடந்து அவர் இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது அவரின் பண்பைக் காட்டுகிறது. விஜய் ஆண்டனிக்கு இன்னும் பல உயரங்கள் காத்திருக்கின்றன,” என்றார் தயாரிப்பாளர் சிவா.