ஆபாசமாக சித்திரிப்பதாக ஜான்வி கபூர் வேதனை

ஆபாசமாக சித்திரிப்பதாக ஜான்வி கபூர் வேதனை

1 mins read
8cb3dc2b-2f20-4d4c-987b-7ce00770a5d9
ஜான்வி கபூர். - படம்: ஊடகம்

நவீன தொழில்நுட்பங்கள் தம்மை பெரிய அளவில் அச்சுறுத்துவதாகச் சொல்கிறார் காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி தனது புகைப்படங்களை ஆபாசமானவையாக மாற்றி இணையத்தளங்களில் சிலர் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்போது ஓர் இணையத்தளத்தில் நானும் அம்மா வழியில் நடிகையாகப் போவதாக ஒரு செய்தி வெளிவந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

“எப்போதோ நானும் என் பெற்றோரும் பொதுவெளியில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்துடன் அந்தச் செய்தி வெளியாகி இருந்தது.

“இப்போது ஏராளமான ஆபாச இணையத் தளங்களிலும் என்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து தவறாகப் பயன்படுத்துகிறார்கள்,” என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

இளம் நடிகையான தன்னுடைய திரை வாழ்க்கைக்கு இது மாபெரும் இடையூறாக உள்ளது என்றும் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்தது என்றும் கூறியுள்ளார் ஜான்வி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்