தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சந்தானத்துக்கு வாழ்த்து தெரிவித்த ஆர்யா

1 mins read
b3102c5f-90fe-4cb6-9c12-c3764509fa6e
சந்தானம். - படம்: ஊடகம்

நடிகர் சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் 250 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், கடந்த சில நாள்களுக்கு முன்புதான் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் படம் வெளியாகிய ஒரு மாதத்துக்குள் 250 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது.

இதையடுத்து சந்தானத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.

“என் நண்பர் சந்தானம் 250 மில்லியன் பார்வைகளைப் பெற்றார்,” என டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து கோடம்பாக்கத்தில் சந்தானத்தின் புதுப் படங்களுக்கான வியாபாரம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்