ஜப்பான் பனித் திருவிழாவில் படப்பிடிப்பு

1 mins read
4c36c421-a4af-424a-b4c8-5c718a317211
சாய் பல்லவி. - படம்: ஊடகம்

இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி.

இப்படத்தின்படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெறுகிறது.

அங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் பனித்திருவிழா நடப்பதும் உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அதில் பங்கேற்பதும் வழக்கம்.

இந்தத் திருவிழாவின்போதுதான் சாய் பல்லவி நடிக்கும் இந்திப் படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதற்கு முன் எந்த இந்திய திரைப்படமும் ஜப்பான் பனித் திருவிழாவில் படமாக்கப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்