விஜய் நடிக்கும் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதால், பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி இப்படத்தின் பூசை நடைபெற உள்ளது.
இதையடுத்து, 3ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் முதலில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்க உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு விஜய்யின் புதுப்படம் குறித்த அண்மைய தகவல் மகிழ்ச்சி அளித்துள்ளது.