ஒருவழியாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வதற்கான தருணம் நெருங்கிவிட்டது. அவர் அடுத்து நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த சில நாள்களில் அஜர்பைஜான் நாட்டில் தொடங்குவது உறுதியாகி உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் என்று அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, அஜர்பைஜானுக்கு முதலில் செல்கின்றனர். அங்குதான் முதற்கட்டப் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்றும் படத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் நடித்த திரிஷா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் இப்படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் ‘லியோ’ படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத், அஜித் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல்.
இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி அடுத்த ஆண்டின் முதல் பாதியிலேயே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக அடுத்த ஆண்டு மே மாத முதல் தேதியில் அஜித்தின் பிறந்தநாளில் இப்படம் வெளியாகக்கூடும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

