சமூக சேவைகளில் ஈடுபடுவதால் பெரும் மன அமைதியும் மனநிறைவும் கிடைப்பதாகச் சொல்கிறார் பிரணிதா.
சேவை செய்தால் புகழ் கிடைக்கும் என்பதற்காக தாம் எதையும் செய்யவில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கர்நாடக மாநிலத்தில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத பள்ளிகள் உள்ளன. அவற்றைச் சீரமைக்கவும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன்.
“இதுவரை பத்து பள்ளிக்கூடங்களைத் தத்தெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனது சேவையை கர்நாடக அரசு பாராட்டி அங்கீகரித்ததில் மகிழ்ச்சி.
“மிக விரைவில் மேலும் சில பள்ளிகளை தத்தெடுத்து ஆதரவளிப்பேன்,” என்கிறார் பிரணிதா.
தமிழில் கார்த்தி நாயகனாக நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், திருமணத்துக்குப் பிறகும் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


