திரிஷாவும் சமந்தாவும் ஓய்வெடுப்பதற்காக தற்போது அமெரிக்காவில் தங்கி உள்ளனர்.
இந்நிலையில், இருவரும் அங்கு மிதிவண்டி ஓட்டும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
அமெரிக்க சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது உற்சாகம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அமெரிக்காவில் தனது நாட்களை மன அமைதியுடன் கழிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமந்தாவுக்கு அமெரிக்காவில் அளிக்கப்படும் சிகிச்சை விரைவில் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல் திரிஷாவும் அமெரிக்க சாலைகளில் சைக்கிள் ஓட்டும் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அவர் இரண்டு வார விடுமுறையை அங்கு கழித்து வருகிறார். அங்குள்ள தோழிகளை சந்தித்துப் பேசியும் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தும் பொழுதைக் கழிக்கிறாராம்.

