‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பிற்கு தணிக்கைச் சான்றிதழ் பெற தாம் ரூ.6.5 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது என்று நடிகர் விஷால் கூறியிருந்தார்.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘அப்பா’ படத்திற்கு வரிவிலக்கு பெற லஞ்சம் தந்ததாகத் தெரிவித்துள்ளார்.
“நியாயமாகப் பார்த்தால் ‘அப்பா’ போன்ற திரைப்படத்தை அரசாங்கம்தான் தயாரித்திருக்க வேண்டும். ஆனால், மிகவும் சிரமப்பட்டு அப்படத்தை நானே தயாரித்து, இயக்கி நடித்திருந்தேன். அதற்கு வரிவிலக்கு சான்றிதழ் பெற நானும் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் மிகவும் வருத்தமடைந்தேன்,” என்று சமுத்திரக்கனி கூறியுள்ளார்.


