தெலுங்குத் திரையுலகில் தமக்கான நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகச் சொல்கிறார் பிரியங்கா மோகன். இந்நிலையில் நடிகர் நானியின் அடுத்த படத்தில் இவர் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ‘கேங் லீடர்’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘அண்டே சுந்தரனிகி’ பட இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில்தான் அவரது ஜோடியாக பிரியங்காவை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
தெலுங்குத் திரையுலகில் மாறுபட்ட கதைக் களங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் நானி தற்போது, ‘ஹாய் நானா’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவரும் பிரியங்காவும் இணைந்து நடிக்கும் புதிய படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் உருவாகிறதாம். இதை அறிந்ததும் உற்சாகத்தில் மிதக்கிறாராம் பிரியங்கா.

