நலன் குமாரசாமி இயக்கும் புதுப் படத்தில் நடிகர் கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி விரைவில் வெளியாக உள்ளது.
தற்போது ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இதையடுத்து தனது 26வது படத்தில் நடித்து வருகிறார்.
நலன் குமாரசாமி இயக்கும் இப்படத்தில் கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ஐம்பது விழுக்காடு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்படத்தில் கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடிப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பு, ‘சிறுத்தை’, ‘சர்தார்’ ஆகிய படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி.